• May 10 2025

"ஆபரேஷன் சிந்தூர்" புதிய பட போஸ்ட்டர் வெளியீடு..!

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

பகல்ஹாமில் நடைபெற்ற 26 பொதுமக்கள் கொடூர கொலை சம்பவத்தினை தொடர்ந்து இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது போர் தொடுத்துள்ளது. கடந்த வாரம் ஆரம்பமாகிய இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைத்துள்ளனர். 


தற்போது இந்த பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஒரு சில இயக்குநர்கள் குறித்த பெயரினை தங்களது படத்திற்கு வைப்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர். மேலும் இதன் காரணமாக இந்தியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் பெயரில் படம் எடுக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்று நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த பெயருடன் புதிய பட போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement