• May 10 2025

"கிளி மாதிரி பொண்டாட்டி குரங்கு மாதிரி காதலி.." ரவி மோகனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது பெயரை ரவி மோகன் என மாற்றி கொண்டார். தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இவர் தற்போது ஜசரி கணேஷ் மகளின் திருமணவிழாவிற்கு தனது நண்பியான கெனிஷாவுடன் கலந்து கொண்டிருந்தார். மேலும் இவர்கள் இருவரும் ஒரே நிற ஆடை அணிந்து கைகோர்த்து வந்துள்ளனர். இதனால் தற்போது ரவிமோகன் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.


மேலும் நேற்றையதினம் இவரது மனைவி ஆர்த்தி மனம் வருந்தி அறிக்கை ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் ரவிமோகனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 


இவர் கெனிஷாவுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாகவே விவாகரத்து முடிவினை எடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் குறித்த பெண்ணை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 3000 ஆயிரம் கோடி சொத்துக்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாக ஒரு சில வதந்திகள் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement