தென்னிந்தியாவின் பிரபல நடிகர் பிரபாஸ், சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். இதன் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தற்போது தி ராஜா சாப் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த ஹாரர் திரில்லர் படத்தை இயக்குநர் மாருதி இயக்கி வருகின்றார், மேலும் படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பிரபாஸின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், அவரது தலையில் முடி மெருகின்மை மற்றும் வயதான தோற்றம் காணப்படுகிறது. பலரும் இதைப் பார்த்து “பிரபாஸ் இவ்வளவு விரைவாக மாறிவிட்டாரா?” என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் புகைப்படத்தை கலாய்த்து மீம்ஸ் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். ஆனால் விரைவில் இது ஒரு உண்மையான புகைப்படம் அல்ல, Artificial Intelligence தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படமென்று தெரிய வந்ததுள்ளது . முடி உதிர்ந்து வயதான தோற்றத்தில் பிரபாஸ் – இது ஒரு ஏ.ஐ. உருவாக்கம் என்பதை உறுதி செய்த பிறகு ரசிகர்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் இந்த புகைப்படம் இனிமேலும் சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்புவதே உறுதி!
Listen News!