• Apr 27 2025

பிரியங்காவின் குரலில் ரீல் செய்த வித்யா பாலன்..!வைரலாகும் பதிவு

Mathumitha / 4 months ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தெலுங்கு,பெங்காலி என பல மொழிகளில்  நடித்துள்ள பிரபல நடிகை தான் வித்யா பாலன் இவர் தற்போது விஜய் டிவியின் தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமுமான பிரியங்காவின் குரலில் ஒரு ரீலின் மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த ரீலில், "ஏங்க, நான் ஒரு கிரியேட்டர், நான் நிறைய கிரியேட் பண்ணுவேன், நிறைய பிராப்ளம் கிரியேட் பண்ணுவேன்" என்று பிரியங்கா குக் வித் கோமாளி மேடையில் பேசியதை டப்மாஷ் செய்துள்ளார்.குறித்த ரீல் ரசிகர்கள் பலராலும் செய்யப்பட்டு வந்துள்ளதுடன் தற்போது வித்யா பாலன் செய்துள்ள குறித்த காணொளியினைப் பார்வையிட்ட பிரியங்கா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "omg நீங்களுமா?அருமையான சர்ப்ரைஸ் நான் எனது பேவரைட் வித்யா பாலன் அவர்களுக்கு முதன்முதலில் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆகி உள்ளேன்"என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement