பல்வேறு மொழி திரைப்படங்களில் கலக்கி வரும் நடிகை ராதிகா ஆப்தே, தனது ஆரம்ப கர்ப்ப காலத்தில் சந்தித்த சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். நேஹா துபியாவின் ‘ஃப்ரீடம் டு ஃபீட்’ (Freedom to Feed) நேரலையில் கலந்துகொண்ட அவர், இந்தியா மற்றும் ஹாலிவுட் திரையுலகில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்தார்.
"ஒரு இந்திய தயாரிப்பாளர் எனது கர்ப்பம் குறித்த தகவலை அறிந்ததும், மகிழ்ச்சியடையவில்லை. எனது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் இறுக்கமான உடைகளை அணிய வற்புறுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை சரியில்லாத போதும் மருத்துவரை சந்திக்க அனுமதிக்கவில்லை," என்று ராதிகா கூறினார்.
அதே நேரத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் தனது நிலையை புரிந்துகொண்டு உற்சாகம் வழங்கியதாகவும் அவர் பகிர்ந்தார். “நான் உணவுத் தவிர்க்க முடியாமல் அடிக்கடி சாப்பிட நேர்ந்தது. அதனால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்த இயக்குநர், 'கவலைப்படாதே, நீ கர்ப்பிணி. வேறு நபராக இருந்தாலும் பரவாயில்லை' என்று ஆறுதல் கூறினார்,” என அவர் தெரிவித்தார்.
"நான் பெரும் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் கர்ப்பம் பற்றிய இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த பிறகு, குறைந்தபட்ச மனிதாபிமானம், கருணை மட்டுமே எனக்குத் தேவைப்பட்டது," என்று உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
Listen News!