கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘Oh God Beautiful’ (ஓ காட் பியூட்டிபுல்). இந்த படத்தை இயக்கும் பணியை விஷ்ணு விஜய் மேற்கொண்டுள்ளார். நகைச்சுவை மற்றும் குடும்பம் சம்மந்தமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘வேனும் மச்சா அமைதி’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த லிரிக்கல் வீடியோ, தனது கம்மாளான இசையும், அசர்க்கும் வரிகளுடனும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதுவும் சிறப்பாக, இந்த பாடலை நம் அனைவரின் விருப்ப நடிகரும் பாடகருமான சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஒரு சிரப்பான சப்ரைஸ். இதனால் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பாடலின் மெட்டும் இசை அமைப்பும் இளைய தலைமுறைக்கு பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Listen News!