தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகராக வலம் வருபவர் சூர்யா. தன்னிச்சையான கதைத்தேர்வுகள் மற்றும் சமூகவிழிப்புணர்வு கொண்ட படங்கள் என தனது நடிப்பு மூலம் அதிகளவான மக்களைக் கவர்ந்தவர். தற்போது அவர் நடிக்கும் 46வது திரைப்படம் குறித்து ரசிகர்கள் இடையே அவலுடன் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இன்று சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அவரது புதிய படமான ‘சூர்யா 46’ பற்றிய அப்டேட் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டை தயாரிப்பாளர் நாக வம்சி, இன்று (ஜூலை 23) மாலை 4.06 மணிக்கு வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சூர்யாவின் 50வது பிறந்த நாளில், அவரது 46வது திரைப்பட அப்டேட் ரசிகர்களுக்கு சிறந்த பரிசாக வழங்கப்படுகிறது. இந்த அப்டேட்டின் பின்னணி குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!