தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தனது 45-வது படமாக "கருப்பு" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ரெட்ரோ படத்துக்குப் பிறகு, இந்த படத்தில் சூர்யா ஒரு வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகின்றார். சூர்யாவுடன் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு "கருப்பு" திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் புரொமோஷனில் முக்கிய கட்டமாக அமைந்துள்ள இந்த டீசர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வித்தியாசமான கதையும், சூர்யாவின் வலுவான நடிப்பும் டீசரில் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாள் அன்று , அவரை நேரில் காண வேண்டி அவரது ரசிகர்கள் சென்னை வீட்டின் முன்பு அதிக அளவில் திரண்டனர். ரசிகர்களின் அன்பைக் கவனித்த சூர்யா, தனது வீட்டு பால்கனியில் வந்து கையசைத்து நன்றியை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!