தமிழ் சினிமாவில் "புன்னகை அரசி" என அழைக்கப்படும் நடிகை சினேகா, தனது அழகிய புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இடம்பிடித்த சினேகா, தற்பொழுது துணை கதாபாத்திரங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் கலக்கி வருகிறார்.
தற்போது, அவர் பகிர்ந்த சில பாரம்பரிய சாறி அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
சினேகா அணிந்திருக்கும் இந்த பாரம்பரிய பட்டு சாறி, அவருடைய அழகை சிறப்பாக காட்டியுள்ளது. அத்தோடு அழகிய நகைகளும், மென்மையான மேக்-அப்பும், அவரை இளமையாக மாற்றியுள்ளது.
சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டதும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவரை கமெண்ட்ஸ் மூலம் புகழ்ந்துள்ளனர்.
Listen News!