• Sep 14 2025

1000 கோடி வசூலித்த படமும் இல்ல.. ஆனா இப்பதான் மகிழ்ச்சியா இருக்கு! சமந்தா கொடுத்த விளக்கம்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட உலகில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் சமந்தா, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா பயணம், மற்றும் மனநிலை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.


இவரது பேச்சுகள் பிரபலமான நடிகையின் கருத்துகளாக இல்லாமல், வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான மனநிலை மாற்றத்தையும், வெற்றியின் உந்துதல் என்னவென்பதையும் நமக்குக் கற்றுத்தரும் வகையில் உள்ளது. அவரது இந்தக் கருத்துகள் தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது. 

சமந்தா கடந்த ஒரு தசாப்தமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தெறி, மெர்சல், இரும்பு திரை போன்ற படங்கள் இவரை முன்னணிக்கு அழைத்துச் சென்றவை.


ஆனால், சமீபமாக அவரது படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளன. இதனால் ஒரு விதமான "கம்பேக்" எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் தன்னுடைய மனநிலை பற்றிய நேர்மையான கருத்துகளைக் கூறியுள்ளார்.

சமந்தா அதன்போது, "இப்பொழுது என்னுடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே போல என்னிடம் 1000 கோடி வசூல் செய்த படமும் எதுவும் இல்ல. ஆனால் நான் முன்பை விட இப்பொழுது தான் மன அழுத்தம் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

இந்த வார்த்தைகள் சாதாரணமாகக் கேட்டால் யாருக்கும் அது பெரிய செய்தி போல தோன்றவில்லை. ஆனால், ஒரு நடிகை, தனது வாழ்க்கையின் உச்ச நிலையில் இருந்தபோதிலும், பல சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை இந்தச் செய்தி வெளிப்படையாக வெளிச்சமிடுகிறது.

Advertisement

Advertisement