• May 10 2025

கஸ்தூரி கடந்து வந்த பாதை ....! மனு மிஷன் ஆரம்பிக்க காரணம் ...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி சங்கர். இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் எனப் பல மொழிகளிகளில் நடித்துள்ளார்.தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, தான் கடந்து வந்த பாதை பற்றி கூறியுள்ளார். அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது .


இவர் சில காலங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் போஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது சமூக செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். அன்னையர் தின சிறப்பு காணொளியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தான் கடந்து வந்த பாதை மற்றும் "மனு மிஷன்" எப்படி உருவான விதம் பற்றி கூறியுள்ளார் .


'என்ன பெத்தவங்க  இறந்தபோது தையிரியமாகத்தான் இருந்தன் ஆனா 'நான் பெத்தது உயிக்காக போராடின போது நான் பயந்து விட்டேன்' என்றும் அதனால் தான் மனு மிஷன் ஆரம்பித்தேன் என்றும் கூறியுள்ளார்.மேலும்  தனனு மகளுக்கு வந்தது இரத்த புற்று நோய் 2 வருடத்திற்கு மேலாக வைத்திய சாலையில் இருந்ததாகவும் கூறியிருந்தார். 


அதோடு 'தனக்கு தெரிந்த 10 வயது சிறுவனுக்கு புற்று நோய் வந்தபோது அவரை காப்பாற்ற முடியாமல் போனதாகவும்  அந்த சிறுவனுடைய இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார்அத்துடன் அவர்களை பார்க்கும் போது நான் நல்லவள் இல்லை. ஏன்னா நான் நினைத்தது என்னோட பொண்ணோடா உயிர் காப்பாற்றியாச்சுன்னு . அதனால தான் பணம் இல்லாமல் எந்த உயிரும் போகாகூடாது என்பதற்காகத்தான் மனு மிஷன் ஆரம்பித்ததாகவும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement