• Apr 27 2025

பணத்துக்காக பெயர் மாற்றம்... – நடிகரின் திடீர் முடிவு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் நடிகர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது ஒரு சாதாரண விடயமாகவே தற்போது  உள்ளது. சமீபத்தில், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் பெயர் மாற்றம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கெளதம் கார்த்திக்  தனது பெயரை மாற்றிக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மிக முக்கியமான காரணம் திரைப்பயணத்தில் புதிய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். அவருடைய முன்னணி படங்கள் சில பெரிய வெற்றியை பெறாததால், புதிய பெயர் மூலம் புதிய சக்தியுடன் திரையுலகில் புது முயற்சி மேற்கொள்ள விரும்புகிறார்.


திரைத்துறையில் புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்காக சில நடிகர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது ஒரு வழக்கமான நடைமுறையாகவே உள்ளது. இந்த பெயர் மாற்றம் அவரது சினிமா பயணத்துக்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் நடிகர் கெளதம் கார்த்திக் தனது பெயரை ராம் கார்த்திக் என மாற்றிக்கொண்டது அவரது திரை பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இது அவரது நடிகர் வாழ்க்கைக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement