கன்னடத்தில் வெளியான ஹாரர் காமெடி திரைப்படமான ‘Su From So’, எதிர்பாராத வகையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. புதுமுகங்களைக் கொண்டு உருவாகிய இப்படம், திறமையான படைத்திறனாலும் தனிச்சிறப்பான கதைச்சொல்லாலும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது.
ஜே. பி. துமிநாட் இயக்கிய இந்த படத்தை ராஜ் பி. ஷெட்டியின் Light Buddha Films நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் ஷனீல் கவுதம், ஜே. பி. துமிநாட், தீபக் ராய் பனாஜே, மற்றும் மைம் ரம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த வெற்றிக்குப் பிறகு, திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை JioCinema கைப்பற்றியது. ஆரம்பத்தில், செப்டம்பர் 5, 2025 அன்று படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகாததால் ரசிகர்கள் சிறிய அளவுக்கு ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக, ‘Su From So’ திரைப்படம் செப்டம்பர் 9, 2025 முதல் JioCinema-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கிய இந்த வெளியீடு, ஹாரர் மற்றும் காமெடியின் கலவையை ரசிக்க விரும்புவோருக்கான சிறந்த ஓடிடி அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!