தமிழ் ரசிகர்களிடையே தங்களது தனித்துவமான நகைச்சுவை பாணியால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நகைச்சுவை நடிகரும், சமூக சேவையாளருமான, ‘கலக்கப்போவது யாரு’ புகழ் KPY பாலா, சமீபத்தில் தனது உணர்வுபூர்வமான பேட்டியால் மீண்டும் ஒரு முறை எல்லா மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில், பாலா பற்றி சிலர், “அவருடைய உதவிகள் எல்லாம் மற்றவர்களிடம் வாங்கிய பணத்தில் தான்” என விமர்சனங்கள் வெளியிட்டு வந்தனர். இதற்கு பதிலாக, பாலா தன்னுடைய உண்மையான வாழ்க்கை, அர்பணிப்பு உணர்வு, மற்றும் தமிழ் மக்கள் மீதுள்ள நன்றியுணர்வு குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பாலா, “இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் ஒரு ரூபாய் கூட வாங்கி உதவி பண்ணல. இரவு பகலா கஷ்டப்பட்டு உழைச்சு, சொந்தக் காசுல தான் பண்றேன். நான் இங்க நிற்கிறதுக்கு ஒரே ஒரு காரணம் – தமிழ் நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான். அதை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்.” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!