அஜித் ,விஜய் ,சூர்யா என பல பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த கமல்காசனின் மகள் சுருதிகாசன் சமீபகாலமாக காதல் சர்ச்சையில் சிக்கி வருகின்றார். மேலும் இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் டேட்டிங் செய்து வருவதாக ஒரு சில வதந்திகள் வெளியாகியிருந்தது.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சுருதிகாசன் தற்போது நேர்காணல் ஒன்றில் மிகவும் கவலையுடன் கூறியுள்ளார். தற்போது விஜயின் "ஜனநாயகன் " படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பேட்டியில் " நான் ஒரு விஷயத்தை விட்டுட்டேன் என்றால், திரும்பவும் அது குறித்து வருத்தப்பட மாட்டேன். நான் என்னால் முடிந்த அளவுக்கு ட்ரை பண்ணினேன். ஆனால், மக்கள் இது உனக்கு எத்தனையாவது பாய் ப்ரெண்ட் என்று கேட்கிறார்கள். உங்களுக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது. அது உங்களுக்கு வெறும் நம்பர். ஆனால், எனக்கு அத்தனை தடவை நான் தோற்றுப் போய் இருக்கிறேன் என்பதுதான். அதற்காக நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்." என பதிலடி கொடுத்துள்ளார்.
Listen News!