சின்ன திரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகிய வாணிபோஜன். சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ் எனப் பல தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இவர். பல திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வாணி போஜன் தனது நடிப்புத் திறமையாலும், அழகிய தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் வெளியான "ரெட்ரோ" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கடந்திருந்த நிலையில். இந்த படத்தில் இடம் பெற்ற "கனிமா பாடல்" ரசிகர்களால் பெரிதும் கொண்டாடபட்டு வந்தது.
மேலும் ரசிகர்கள் இந்த படத்தில் இடம் பெற்ற கனிமா பாடலுக்கு ரசிகர்கள் பலர் ரீல்ஸ் செய்து தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருந்தனர். இந்த நிலையில் கனிமா பாடலிற்கு வாணிபோஜன் நடனம் ஆடி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!