• Jul 20 2025

அனிருத்தின் 'Hukum Chennai Concert' தற்காலிகமாக ஒத்திவைப்பு.! நடந்தது என்ன.?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் இசை உலகத்தில் இன்றைய தலைமுறையின் பிரமாண்ட இளம் நாயகனாக வலம் வருபவர் அனிருத். இவர் தற்பொழுது பல ஆயிரம் பேர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 


அந்த வகையில், ஜூலை 26ம் தேதி நடைபெறவிருந்த 'Hukum Chennai Concert' எனும் அனிருத்தின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி, தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி தொடர்பான முக்கியமான அறிவிப்பை, அனிருத் தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"ரசிகர்களின் பெரும் ஆதரவு, வரவேற்பு மற்றும் நிகழ்விட வசதிகளைக் கருத்தில் கொண்டு, இந்த கச்சேரியை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

இது ஒரு சிக்கல் தீர்வு அல்ல, உங்கள் பாதுகாப்பு மற்றும் தரமான நிகழ்ச்சி அனுபவத்தை உறுதி செய்யும் முடிவு. விரைவில் புதிய தேதியை அறிவிக்கிறோம்." என்றார்.


இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட செய்திக்கு பலரும் மீம்ஸ், கருத்துகள், சலிப்பு என கலவையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement