• Dec 27 2024

அதுக்குள்ள 2 ரெண்டு மாசமா..? இப்ப தான் கல்யாணமே முடிஞ்சுது! இந்திரஜா நெகிழ்ச்சி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்படும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. தற்போது அவர்களுடைய திருமணம் இரண்டு மாதங்களை கடந்த பின்பும் அவர்கள் தொடர்பிலான செய்திகள் இன்னும் வைரலாகி கொண்டு தான் உள்ளன.

சின்னத் திரையில் அறிமுகமாகி வெள்ளித் திரையில் கலக்கிய காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜாவும் பிகில்  படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார். இதில் இவரது கேரக்டர் பாண்டியம்மாள். அது மிகவும் ஃபேமஸ் ஆனது இவரை நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென அவருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது.


ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பி   கார்த்திக்கும் இந்திரஜாவிற்கும் தான் திருமணம் நடந்தது. இதில்  பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த திருமணத்தின் போதும் திருமணம் முடித்த பின்பும் பல சர்ச்சைகளை அவர்கள் சந்தித்திருந்தார்கள். ஆனாலும் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகவே நகருகின்றது..


இந்த நிலையில் தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அதுக்குள்ள கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகிடுச்சு' என ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பதிவிட்டுள்ளார். தற்போது அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement