• Dec 26 2024

சட்டவிரோத விளம்பரம்! நடிகை தமன்னாவிடம் 5 மணிநேரம் விசாரணை...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

முன்னணி நட்சத்திர நடிகை தமன்னா விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தமன்னா. தனது வசீகர தோற்றத்தினாலும் ரசிகர்களை நிரளவும் தக்க வைத்துள்ளார். 


பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இந்நிலையில் சட்டவிரோதமான ஐபிஎல் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நடிகையிடம் அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணை நடத்தியது. அசாமின் குவாஹாட்டியில் உள்ள ED அலுவலகத்திற்கு விசாரணைக்காக தமன்னா அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 


சட்டவிரோத ஐபிஎல் பந்தய நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்ட செயலியின் விளம்பரங்களில் அவர் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமன்னா, தனது தாயுடன், குவாஹாட்டிக்கு சென்று, ED அதிகாரிகள் முன் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணையின் முடிவுகள் இன்னும்  வெளியாகவில்லை.  


Advertisement

Advertisement