• Dec 26 2024

நாளைக்கு தியேட்டர் வாசல் திருவிழாதான்! ஒரே நாளில் களமிறங்கும் 7 தமிழ்ப்படங்கள்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதனால் சினிமாத்துறையினர் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். தேர்தல் திகதியில் திரைப்படங்களை வெளியிட முடியாதென்பதனால் இந்த மாதத்தில் வெளியாக உள்ள சில திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் டேட்டை தெரிவுசெய்துள்ளனர். இதனால் நாளைய தினம் மாத்திரமே 7 தமிழ் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாக உள்ளன.


அந்த வகையிலேயே பாப்சுரேஷ் இயக்கத்தில் கிரி துவராக்கிஸ் , டோலி ஐசு , அழகு ராஜா நடிக்கும் "இரவின் கண்கள்" , ஜெயகிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தயாரான "ஆலகாலம்" , மணி தாமோதரன் இயக்கத்தில் MS  பாஸ்கர் லீட் ரோல் ஆக நடிக்கும் "ஒரு தவறுசெய்தால்" , விநாயக் துறை இயக்கத்தில் தாயாராகிய "வல்வன் வகுத்ததடா" , மீரா மகதி இயக்கத்தில் யாசிக் ஆனந்த் நடிக்கும் டபுள் டக்கர் மற்றும்  ராஜசேகர் இயக்கத்தில் அனந்தி நடிக்கும் வைட் றோஸ்  ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றது.


மற்றும் இவற்றுடன் இணைந்து விஜயதேவர் கொண்டா மற்றும் முருநல்  தாகூர் நடிக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கும் நாளை வெளியாகின்றது. இது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதோடு ஜிவி பிரகாஷ் நடிப்பில் தயாரான கள்வன் திரைப்படம் இன்றய தினம் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement