• Dec 27 2024

தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பும் டாப் 10 ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிம்புக்கு இந்த நிலையா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்பது பற்றிய விபரம் மற்றும் அவர்கள் வாங்குகின்ற சம்பளம் குறித்த தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி முதலிடத்தை பிடித்துள்ளார் இளைய தளபதி விஜய். விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். ஆனாலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியும் ஆரம்பித்துள்ளார்.  இவர் தற்போது கோட் படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் நடிகர் அஜித்குமார் காணப்படுகிறார். இவரது சம்பளம் 163 கோடியாக காணப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இவர்களின் வரிசையில் ரஜினிகாந்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இவரது சம்பளம் 140 கோடி முதல் 150 கோடி வரை காணப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் மற்றும் தலைவர் 171 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

நான்காவது இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் 120 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா 60 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் காணப்படுகிறார்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன் 55 கோடியும், நடிகர் தனுஷ் 40 கோடி முதல் 50 கோடி வரையும்,  கார்த்திக் 28 கோடியும்,  சிம்பு , விஷால் 25 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement