• Dec 26 2024

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சுருண்டு விழுந்த பிரபல நடிகர்! திடீரென என்னாச்சு? பதறும் பிரபலங்கள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, போஜ்புரி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் சாயாஜி ஷிண்டே.

பல மொழிப்படங்களில் சாயாஜி ஷிண்டே நடித்திருந்தாலும், தமிழில் இவர் பாரதி பாடத்தில் சுப்ரமணி பாரதியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார்.

அத்தோடு  அந்த படத்தில் சாயாஜி ஷிண்டே தோற்றமும், மூசை, முண்டாசும் பாரதியை நினைவுப்படுத்தின.  இத் திரைப்படத்தை தொடர்ந்து பூவெல்லாம் உன் வசம், அழகி, பாபா போன்ற படங்களில் நடித்தார்.


மேலும், அழகிய தமிழ் மகன், வேலாயுதம்,வேட்டைக்காரன் என அடுத்தடுத்து விஜய்யின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். ஜெயம் ரவி , ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நகைச்சுவையில் பின்னிபெடல் எடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  நடிகர் சாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவருக்கு இதயக்குழாய்களில் ஒன்று 99 சதவீதம் அடைப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement