• Dec 25 2024

சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. இவர் சீதாவுக்கு மாப்பிள்ளையா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகின்றது. அது மட்டும் இன்றி இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தையே குறுகிய காலத்திற்குள்  உருவாக்கி உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் நாளாந்தம் வித்தியாசமான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் இந்த சீரியலில் ரோகிணி கேரக்டர் செய்யும் அட்டூழியங்கள் இன்னும் விஜயா வீட்டாரிடம் சிக்கவில்லை என்ற வெறுப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் டைரக்டர் ரோகினியை காப்பாற்றி வருவதாக தமது வெறுப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் ரோகினி சத்யாவின் வீடியோவை எடுப்பதற்கு முயன்றும் அது முடியவில்லை.   இன்னொரு பக்கம் வித்யா வீட்டில் இருந்து ரோகினிக்கு பிஏ ஃபோன் பண்ணி  மிரட்டுகின்றார்.


மறுபக்கம் மீனாவின் தங்கச்சி சீதாவை பொண்ணு பார்த்துவிட்டு பொண்ணு மிகவும் பிடித்திருப்பதாக மாப்பிள்ளையின்  பெற்றோர்கள் தெரிவித்துப் போகின்றார்கள். ஆனாலும் மாப்பிள்ளை யார் என்று இன்னமும் காட்டவில்லை.

இந்த நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் புதிதாக நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. அதன்படி ஆக்டர் குமரன் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அனேகமாக இவர் சீதாவுக்கு பார்த்துள்ள மாப்பிள்ளையாக தான் காணப்படுவார் என ரசிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement