• Dec 27 2024

ஒரு படம் ஜெயிக்க கதை தேவைல.. தமன்னா டான்ஸ் மட்டும் போதும்! பார்த்திபன் அதிரடி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக ரிலீசான திரைப்படம் தான் டீன்ஸ். இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தயாரித்திருந்தார்.

பிரம்மாண்ட செலவில் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்ய தவறி உள்ளது.

இதன் காரணத்தால் இந்தியன் 2 படம் பார்த்த ரசிகர்கள் இதைப் பற்றி படுமோசமாக தமது விமர்சனங்களை தெரிவித்து இருந்தார்கள். இதனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் தள்ளாடி வருகின்றது.

இந்த நிலையில், தற்போது சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட டீன்ஸ் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், பார்த்திபனை பிரபல சேனல்களும் போட்டி போட்டு பேட்டி எடுத்து வருகின்றன.


அந்த வகையில் பார்த்திபன் அளித்த பேட்டி ஒன்றில், டீன்ஸ் படம் அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாக எடுக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் தற்போது தமிழில் சரியாக பேசாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு படத்தை ஹிட் பண்ணுவதற்கு தமன்னாவின் டான்ஸ் போதும் கதை அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

அதாவது ஜெய்லர் படத்தில் தமன்னா ஆடிய காவாலயா டான்ஸ் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அது போலவே சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்திலும் தமன்னா கவர்ச்சி டான்ஸ் ஆடி இருப்பார். இந்த இருப்படங்களுமே வசூல் ரீதியாக 100 கோடி ரூபாயை தாண்டி இருந்தது.

இதனை மையமாகக் கொண்டே தற்போது பார்த்திபன் ஒரு படத்தின் கதை ஜெயிப்பதற்கு கதை அவசியமில்லை அதில் தமன்னா டான்ஸ் ஆடின போதும் என சுட்டிக்காட்டி உள்ளார்.

Advertisement

Advertisement