• Dec 27 2024

கோலிவுட் சினிமால இவங்க படங்கள் எல்லாம் வேஸ்ட் ! பிரபல நடிகர்கள், இயக்குனர்களுக்கு பேரிடி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும். ஆனால் சில சமயங்களில் அந்த எதிர்பார்ப்பை குறித்த படங்கள் பூர்த்தி செய்ய தவறி விடுகின்றன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை வெளியான படங்களில் ஒன்று, இரண்டு படங்கள் மட்டுமே ஹிட் அடித்தன. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றன.

அந்த வகையில் சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மனை 4 , சூரி நடித்த கருடன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது வெளியான இந்தியன் 2 திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது.

இந்த நிலையில், சினிமா விமர்சகரும் பிரபலமான யூடியூப்பருமான ப்ளூ சட்டை மாறன், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தோல்வி கொடுத்த படங்களின் லிஸ்ட் போட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதன்படி ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம், கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2, விஷால் நடித்த ரத்னம், சிம்பு நடித்த பத்து தல மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களும் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் 2 ,ஜெயம் ரவியின் இறைவன், சைரன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகியவை தோல்வி படங்கள் என சுட்டிக்காட்டி உள்ளார். 

மேலும்  இயக்குனர்களின் தோல்வி படங்களாக, மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2, ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, மற்றும் கௌதமின் யோசுவா, ஹரி இயக்கிய ரத்னம், பாலா இயக்கிய multiple flops , மிஷ்கின் இயக்கிய சைகோ, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் இவர்களுடன் பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது, மோகன்.ஜி இன்  பகாசுரன் போன்ற படங்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன், வசந்த பாலனின் அநீதி, பி.வாசுவின் சந்திரமுகி 2 என ஒரு பெரிய லிஸ்ட் போட்டு சுட்டி காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Advertisement

Advertisement