• Dec 26 2024

கோபியை பார்த்து இனியா கேட்ட ஒரு கேள்வி! தலையில் அடித்துக் கொண்ட ஈஸ்வரி! இறுதியில் ராதிகா போட்ட ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதன்படி, பாக்கியாவை அனைவர் முன்னிலையிலும் கோபி பேசிக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் ராதிகாவும்,  இனியாவும் உள்ளே வருகின்றனர்.

அதன்போது, ராதிகாவை பார்த்து வா ராதிகா வந்து நியாத்த கேளு, என்ன வீட்ட விட்டு போக சொல்லிட்டா, என்ன ஏமாத்தி தான் இந்த வீட்டை புடுங்கினாங்க என சொல்லிக் கொள்கிறார். அத்துடன் நான் வரும் போது பாக்கியாவும் பழனிச்சாமியும் தனியா இருந்து பேசினாங்க என அவர்களை தப்பாக காட்டிக் கொள்கிறார்.


இந்த நிலையில், கோபியை பார்த்து அப்பா நீங்க அம்மாவ பத்தி தப்பா சொன்னிங்களா? நீங்க எப்படி அம்மாவ அப்படி சொல்லலாம் என அப்பாவை பார்த்துக் கேட்கிறார். இதை பார்த்த கோபியின் அப்பா பாரு அந்த சின்ன பிள்ளைக்கு தெரிஞ்சது கூட உனக்கு தெரியலையா என கோபியை திட்டுகிறார்.

இதை தொடர்ந்து, ஈஸ்வரியும் கோபிய நான் தான் வீட்டுக்கு கூட்டி வந்தன். நீ எங்கையும் போக வேண்டாம் என கோபிக்கு சொல்லுகிறார். மேலும் பழனிச்சாமி இனி இங்க வரவும் வேணாம் என பாக்கியாவிடம் சொல்ல, இனியாவும் செழியனும் கோபியின் அப்பாவும் பாக்கியாவுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.

இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த ராதிகாவிடம் நடந்தவற்றை சொல்லும் போது, அவர் ஒன்றும் பேசாமல் ரூமுக்குள் செல்கிறார். இதை பார்த்து என்ன இவ தனியா விட்டுட்டு போயிட்ட என புலம்பிக் கொள்கிறார். மேலும் ரூம்க்கு போய் நீ ஏன் வந்துட்டா? வீட்ட நடக்கிறத பாத்தா தானே. எனக்கு யார் இருக்கா.. நீ தான் எனக்கு சப்போர்ட்டா கதைக்கணும் என சொல்ல, எனக்கு தலைவலி என்று வந்தன்.ஆனா இங்க பெரிய பிரச்சனையே நடக்குது..நான் எப்ப சண்ட போடுவன் என உங்க அம்மா இருக்கா.. நான் வந்தா சண்ட வேற விதமா போகும் என கோபிக்கு ராதிகா சொல்லுகிறார்.


எனினும், என் மேல லவ் இல்ல, பாசம் இல்ல என ராதிகாவை விடாமல் அழைத்துக் கொண்டு இருக்க, இறுதியில் ராதிகாவும் வருகிறார். அதன்படி அனைவர் முன்னிலையிலும் ராதிகாவை கூட்டி வர, எதுக்காக கூட்டி வந்திங்க கோபி என கேக்க, உனக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு என சொல்ல, அப்படியா எனக்கு எல்லா உரிமையும் இருக்கா? உங்க அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாங்களா என கேக்க, அப்படி ஒன்றும் இல்ல நீ கேளு என சொல்லுகிறார்.

இதையடுத்து, நீங்க என்ன சொல்லி என்ன கல்யாணம் பண்ணீங்க கோபி, நாம இந்த வீட்டுல இருக்கிறதே தப்பு,இதுல உங்க பஞ்சாயத்த பண்ணி கொடுக்கணுமா என கோபியை திட்டுகிறார். உங்க பிள்ள உங்க பிள்ள என்று சொல்லுறீங்க. ஆனா எல்லாரும் பாக்கியா பக்கம் தான் இருக்காங்க.. இப்ப நான் என்ன சொல்லணும் என எதிர்பார்க்கிறீங்க மேலும் கேட்கிறார். இடையில் அத்த நான் பேசினது சரியா என கேட்கிறார். 

அதன்பின் அவர் ரூம்க்கு செல்ல எல்லாரும் கோபியை பார்த்து சிரிக்கின்றனர். ஈஸ்வரியும் நல்ல ஆள தான் நியாயம் கேட்டு கூட்டி வந்து இருக்க என சொல்ல, கோபியும் ஒன்றும் சொல்ல முடியாமல் ரூம்க்கு போகிறார். இதுதான் இன்றைய எபிசோட்...



Advertisement

Advertisement