• Dec 26 2024

சட்டவிரோத புள்ளிகளிடம் பணம் பெற்ற சினிமா பிரபலங்கள் பட்டியல்.. இனி கோலிவுட்டில் ஒரே ரெய்டு தானாம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்ததாக ஜாபர் சாதிக் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அவர் அளித்த தகவலின் படி தான் இயக்குனர் அமீர் இடம் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது என்பதும் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஜாபர் சாதிக் மேலும் சில திரையுலக பிரபலங்களையும் கூறியுள்ளதை அடுத்து அவர்களது வீடுகளிலும் ரெய்டு நடக்கும் என்று கூறப்படுவதால் திரை உலக பிரபலங்கள் பலர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

பள்ளியில் பாடம் எடுப்பது போல் சினிமாவில் பாடம் எடுக்கும் இயக்குனர் ஒருவர் மற்றும் காமெடி நடிகராக இருந்து திடீரென ஹீரோவாக மாறிய நடிகர் ஒருவர் ஜாபர் சாதிக் இடம் பணம் பெற்றுள்ளதாகவும் அவர்களைப் பற்றி தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த இரண்டு பிரபலங்கள் எப்போது வேண்டுமானாலும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. அது மட்டுமின்றி ஜாதி அரசியல் பேசும் சினிமா எடுப்பவர்கள் உள்பட பலர் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பதாகவும் கோலிவுட் திரையுலகில் ஒரு மிகப்பெரிய ரெய்டு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement