• Apr 12 2025

.அந்தாளை சும்மா விடமாட்டேன்.. பிரபல பத்திரிகையாளர் மீது செம கடுப்பில் இருக்கும் அஜித்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன்னை பற்றி நெகட்டிவ் ஆக வீடியோ போட்டதை அடுத்து அவர் மீது செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 

நடிகர் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டை தொடர்ச்சியாக ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் திடீரென படப்பிடிப்பின் போது நடந்த கார் விபத்து வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

அஜித் ’விடாமுயற்சி’ படத்திற்காக எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்றும் உயிரை பணயம் வைத்து ரசிகர்களுக்காக நடித்து வருகிறார் என்று ரசிகர்கள் நினைப்பார்கள் என்று அவருடைய மேனேஜர் கொடுத்த ஐடியாவின் படி தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 



இந்த வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் தான் திடீரென பத்திரிக்கையாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ரசிகர்களுக்காக அஜித்தால் ஒரு நல்ல அப்டேட் கொடுக்க முடியாதா, எப்போ பார்த்தாலும் நெகட்டிவ் அப்டேட்டை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆக்சிடெண்ட், ஆபரேஷன் என்று தான் செய்திகள் வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ஒரு நல்ல சந்தோஷமான அப்டேட்டை கொடுத்திருக்கலாமே என்று கூறியிருந்தார். 

இந்த வீடியோ பலரையும் யோசிக்க வைத்து விட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் சிலரும் ஆமாம் நல்ல அப்டேட் கொடுத்திருக்கலாமே என்று கூறி வருகின்றனர். தாங்கள் எதற்காக வீடியோ வெளியிட்டோமோ அதற்கு நேர் மாறாக விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித், இதற்கெல்லாம் காரணம் அந்த பத்திரிகையாளர் தான் என்றும் அவரை சும்மா விட மாட்டேன் என்றும் கூறி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement