• Dec 26 2024

நடிகர் மோகன்லாலுடன் ஆன்மிகத் தொடர்புண்டு! மொட்டை அடித்த காரணத்தை போட்டுடைத்த நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத் திரையுலகில் கடந்த 15 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் லேனா. இந்த நிலையில் தான் மொட்டை அடித்துக் கொண்ட காரணத்தை கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

நடிகை லேனா தமிழில் தனுஷின் அனேகன் மற்றும் திரவுபதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  அத்துடன், தனது பேட்டிகளில் பல விஷயங்களை தத்துவார்த்தமாக பேசும் இவர், தான் விவாகரத்து செய்ய நினைத்த நபரோடு அமர்ந்து குலோப் ஜாமூன் சாப்பிடும் அளவிற்கு வாழ்க்கையை ரொம்ப எளிதாக எடுத்துக் கொள்பவர்.


இவ்வாறான நிலையில், தான் முற்பிறவியில் திபெத் அருகே உள்ள பகுதியில் ஒரு புத்த துறவியாக இருந்ததாகவும், அதன் தூண்டுதல் காரணமாகவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் மொட்டை அடித்துக் கொண்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


அதுமட்டுமின்றி, நடிகர் மோகன்லாலுடன் தனக்கு ஒரு ஆன்மிகத் தொடர்பு இருந்து வருவதாகவும் அவரை தனது ஆன்மிக குருவாக கருதுவதாகவும் கூறி மேலும் அதிர்ச்சி தகவலொன்றை கூறியுள்ளார் லேனா.

Advertisement

Advertisement