தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிசாகும் வகையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 5 புதிய திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளன. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்புடன் தயாராகி உள்ளது.
மேலும் , வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகும் படம் ‘Bad Girl’, பெண்களை மையப்படுத்திய தீவிர கதையம்சத்துடன் தயாராகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு பல எதிர்ப்புக்கள் இருந்த போதிலும் தற்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.
சின்னத்திரை பிரபலமான நடிகர் பாலா முதன்முதலாக பெரிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தி கண்ணாடி’. இந்த படத்தில் சமூக நியாயம் மற்றும் மனிதநேயத்தை பேணும் கதைக்களம் வலியுறுத்தப்படவுள்ளது.
அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் ‘காட்டி’ படம், மர்மம் மற்றும் அதிரடி கலந்த கதை கொண்டதாக உருவாகி வருகிறது. இது ஒரு ஃபீமேல் சென்ட்ரிக் ஆக்ஷன் த்ரில்லர் என கூறப்படுகிறது. மேலும், ஹாலிவுட் ஹாரர் படமான ‘தி கான் ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ தமிழில் டப் செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஹாரர் பிரேஞ்சை விரும்பும் ரசிகர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
இந்த ஐந்து படங்களும் ஒவ்வொன்றாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்தை நோக்கி இது ஒரு முக்கியமான கட்டமாக அமையலாம்.
Listen News!