விஜய் தற்போது "ஜனநாயகன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி அதன் ஷூட்டிங் தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.அந்த இடத்திற்கு செல்வதற்காக சமீபத்தில் விஜய் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்தார்.
விமான நிலையம் வந்தபோது விஜயை பார்ப்பதற்காக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. அதே நேரத்தில் அட்வைசை மீறி விஜய் பயணித்த வண்டியை பின்தொடர்ந்து செல்லும் ரசிகர்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தினர். பின் விஜய் கொடைக்கானலை கடந்து தாண்டிக்குடி என்ற இடத்திற்கு வந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார்.
ஆனால் தற்போது இந்த இடத்தில் ஷூட்டிங்கின் போது ஒரு விபத்து ஏற்பட்டு அதில் பெரிய லைட் தலையில் விழுந்தது. இதில் மைக் மேனுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் தற்போது அவரது நிலவரம் நன்றாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு வேலைகள் இடம்பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Listen News!