தனுஷ் இயக்கத்தில் உருவாகிய " நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " என்ற திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் மற்றும் ரம்யா ரங்கநாதன் போன்ற இளம் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்தவகையில் , NEEK படத்தினை இந்த மாதம் 21 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்ததது.
அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் தற்பொழுது நேர்காணலில் கலந்து வருகின்றனர். அந்தவகையில் , அந்தப் படத்தின் ஹீரோ சமீபத்தில் கதைத்த பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் படத்தின் இயக்குநர் தனுஷ் பற்றி நெகிழ்ச்சியுடன் கதைத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், என்னுடைய inspiration தனுஷ் சார் எனக்கூறியதுடன் தனக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே தனுஷை தெரியும் எனவும் தெரிவித்திருந்தார். குறிப்பாக, ஒரு படத்தில் நான் தனுஷ் சாருக்கு அசிஸ்டன்ட் டயரெக்டராக வேலை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இவ்வளவு காலமாக தனுஷ் சாருடன் திரைக்கு பின்னாடியே வேலை செய்தேன் ஆனால் இந்தப் படத்தின் மூலமாகவே முதல் தடவை திரைக்கு முன்னாடி வேலை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தனக்கு தனுஷ் சாருடன் கதைக்கும் போது பயமாக இருந்தது என்றதுடன் தனுஷ் மிகவும் நல்லவர் என்றும் கூறினார். இந்தப் படம் எடுக்கும் போது தனுஷ் எந்த விதமான பாகுபாடும் பாராமல் அனைவருடனும் friendly ஆக பழகுவார் என்றார்.
Listen News!