• Dec 26 2024

மறைந்த பிரபல எழுத்தாளர்... இரங்கல் தெரிவித்த நடிகர் கமலஹாசன்...

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் மறைந்த பிரபல எழுத்தாளரும், திரை விமர்சகருமான எம்.கே. மணி அவர்களுக்கு தனது இரங்கலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்.கே. மணி தனித்தன்மையான எழுத்து நடையை கொண்டவர். மிகவும் குறிப்பாக தமிழினி இதழுக்காக ஏராளமான கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எழுத்தைத் தாண்டி சினிமாக்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் மணி. திரைத்துறையில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நேற்று (ஜூலை 15) மரணமடைந்தார்.

Image

இவரின் மறைவையடுத்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement