• Dec 26 2024

பிரதமர் மோடிக்கு யாரும் சோறு போடாதிங்க.. தமிழ் நடிகரின் ஆவேச இன்ஸ்டாகிராம் பதிவு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிரதமர் மோடிக்கு யாரும் சோறு போடாதீர்கள் என விவசாயிகளுடன் தமிழ் நடிகர் ஒருவர் கோரிக்கை விடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் கிஷோர். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.



அந்த பதிவில், ‘விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு அடிப்படை ஆதார விலையை கேட்பது கூட குற்றமா? அவர்களை மத்திய அரசு ஒரு கிரிமினல் போல் நடத்தி வருகிறது. கண்ணீர் புகை வீசியும், சாலைகளில் குழி தோண்டியும் விவசாயிகளின் பேரணிகளை மத்திய அரசு தடுக்க பார்க்கிறது.

விவசாயிகள் மீது கண்ணீர் புகை வீச அனுமதித்த பிரதமர் மோடிக்கு சோறு போடாதீர்கள், அவருடைய ஆதரவாளர்கள் யாருக்கும் உணவு கொடுக்காதீர்கள் என்று கூறிய கிஷோர் விவசாயிகள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசிய காவல்துறையினருக்கும் சோறு போடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் என்றும் அது அவர்களது உரிமை என்றும் இந்த போராட்டத்தை நசுக்க பார்ப்பது,  விவசாயிகளை தேச துரோகிகள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement