• Dec 26 2024

விஜய்யை குத்தி காட்டிய கமல்ஹாசன் ....முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை.. அரசியலால் பிளந்த உறவு...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

 தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய  பிரபல நடிகர் விஜய், ’தளபதி 69’ படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்றும், சினிமா துறையை விட்டு விலகி விட்டேன் இனி மேல்  முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன் என்றும் தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன்  ,மக்கள் நீதி மய்யம் கட்சியின்7வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ’முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை என்று கூறினார்.


இங்கு முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை  .  எனக்கு உங்களுடைய முழுமையான அன்பை கொடுத்தீர்கள்.  உங்கள் அன்புக்கு இன்னும் கைம்மாறு  நான் செய்து முடிக்கவில்லை.  அதனால் தான் நான் முழுநேர அரசியலில் இல்லை.


என்னை  முழு நேர அரசியலுக்கு வரவைப்பது உங்களால் முடியாது .  ஆனால் நான் அரசியலுக்கே வர மாட்டேன் சினிமாவிலேயே இருப்பேன் என்று பல பெயர் சொன்னார்கள்.  இப்போது வந்து விட்டேன், அதைவிட என்னை அரசியலை  விட்டு போக செய்வதும் யாராலும் முடியாது. 

நடிகர் விஜய் சினிமாவை விட்டு  முழுநேர அரசியலுக்கு வருவது அது அவருடைய பிரச்சனை  .விஜய்யை முதன் முதலில் அரசியலுக்கு வர சொன்னதே நான் தான்  இதையும் இந்த நேரத்தில்   நினைவூட்டுகின்றேன் ,என்று அவர் கூறியுள்ள இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது . 

Advertisement

Advertisement