• Dec 26 2024

ரொம்ப தப்பா பேசினாங்க... என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை... ஓபனாக பேசிய நடிகை அனுயா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்தடுத்து மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.


நடிகர் விஜய்மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை அனுயா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதாவது நான் துபாயில் பிறந்தவள். தமிழ் எனக்கு கொஞ்சம் தான் தெரியும். பொறியியல் படிப்பை முடித்தவுடன் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். விஜய் ஆண்டனி, சுந்தர்.சி மற்றும் ஜீவா ஆகியோருடன் என்னை இணைந்து தவறாக பேசி வதந்திகளை பரப்புகிறார்கள். அவை அனைத்தும் தவறான தகவல். நான் இப்போது தனியாக தான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.


இதை பார்த்த ரசிகர் ஒருவர் 'ஏன் தனியாக இருக்கிறீர்கள், திருமணம் செய்யலாமே' என கூறினார். இதற்கு 'என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை' என கூறினார் நடிகை அனுயா. இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement