• Dec 27 2024

ப்ரணிதாவின் பாத்டப் குளியல்.. மொட்டை மாடி நீச்சல் குளம்.. போட்டோகிராபர் கொடுத்து வச்சவன்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை ப்ரணிதா தற்போது தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டே சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தாய்லாந்து நாட்டிற்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்று இருக்கும் ப்ரணிதா, அங்குள்ள மொட்டை மாடி நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் புகைப்படங்களையும் பாத் டப்பில் குளிக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’போட்டோகிராபர் கொடுத்து வைத்தவன்’ என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அவர் தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் தண்ணீரில் மிதந்து கொண்டே கணவருடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 நடிகை ப்ரணிதா இன்ஸ்டாகிராமில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவருடைய ஃபாலோயர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக் குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ப்ரணிதா ’தாய்லாந்தில் சில ஹாட் நிமிடங்கள்’ என்றும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உட்பட சில படங்களில் நடித்த ப்ரணிதா, தொழிலதிபர் பிரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement