• Apr 17 2026

டேய் வாட்டர் மெலன்.. உனக்கு சப்போர்ட் பண்ண நினைச்சன்.. ஆனா இப்போ காலணியால அடிப்பேன்.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது சர்ச்சைகளுடன் காணப்படுகிறது. இந்த சீசனில் படப்பிடிப்புக்கு வந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், தன்னை மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவாகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் மாகாபா மது அருந்திவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றும், புகழுக்கும் கானா வினோத்துக்கும் நான் வளர்வது பிடிக்கவில்லை என்றும், இதனால் தான் தன்னை இரும்புக் கம்பியால் தாக்கினார்கள் என்றும், இது தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு பின் இது தொடர்பில் பேசிய மாகாபா ஆனந்த், குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட திவாகர் அங்கு இருந்த போட்டியாளரின் மனைவியிடம் தவறாக பேசியதாகவும், அதனால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் விஜய் டிவி நிர்வாகமே அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியதாகவும், பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் கூறினார்.


இதனைத் தொடர்ந்து பலரும் மாகாபாவின் கருத்துக்கு ஆதரவாக திவாகருக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே திவாகர் தற்பெருமை பேசுபவர், சாதி பார்ப்பவர் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் கூல் சுரேஷ் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் நான் உனக்குத்தான் சப்போர்ட் பண்ண நினைத்தேன். ஆனால் மாகாபாவின் பேட்டியை பார்த்த பிறகு உண்மை புரிந்தது. நீ அடுத்தவரின் மனைவியிடம் தவறாக பேசியிருக்கிறாய். 

அது மட்டுமல்லாமல் பெண்களை இழிவாக பேசியிருக்கிறாய். நான் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன், இல்லையெனில் என் காலணியால் அடிப்பேன். ஜாதியைப் பற்றி பேசுவது தவறு. உன்னிடம் வைத்தியம் பார்க்க வருபவர்களை ஜாதி பார்த்து சிகிச்சை அளிப்பாயா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா?” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement