• Mar 09 2025

நடிகை என்றால் ஆடம்பரமாவா இருக்கணும்....!இணையத்தில் வைரலாகும் குஷ்புவின் செயல்......

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நடிகை குஷ்பூ, தனது எளிமையான நடத்தை மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். குஷ்பூ பொதுமக்களுடன் சாதாரணமாக ஒரு ஆட்டோவில் பயணம் செய்கின்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது. இந்த வீடியோ வைரல் ஆகியவுடனே பலரும் அவரின் எளிமையை பாராட்டி வருகின்றனர்.

சினிமா, அரசியல் மற்றும் சமூக சேவைகள் என பல்வேறு துறைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கும் குஷ்பூ, எப்போதும் மக்களோடு நெருக்கமாக இருப்பதையே விரும்புவார். அத்தகைய குஷ்பு தற்போது ஆட்டோவில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். குஷ்பூ ஒரு சாதாரண பயணியாக ஆட்டோவில் அமர்ந்து பயணம் செய்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள்  "குஷ்பு எப்போதும் எளிமையானவர்!" என்று பாராட்டி வருகின்றனர். சிலர், "சினிமா நட்சத்திரமாக இருந்தும் ஆடம்பர வாழ்க்கையை புறக்கணித்து விட்டு சாதாரணமாக நடந்து கொள்கிறார்" எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் பல நடிகைகள் ஆடம்பர வாழ்க்கையை விட்டு, எளிமையான முறையில் மக்களோடு இணையத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், குஷ்புவின் இந்த செயல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலர் "நடிகைகள் என்பவர்கள் எப்போதும் பிரம்மாண்டமாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடியோ என்கிறார்கள்.

Advertisement

Advertisement