• Dec 26 2024

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்! நடிகைகள் சாக்கடை புழுவா? கொந்தளித்த சாந்தி வில்லியம்ஸ்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஏராளமான சீரியல்களிலும் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளவர் தான் நடிகை சாந்தி வில்லியம்ஸ். பல படங்களில் தாய் அல்லது மாமியாராக துணை வேடங்களில் நடித்துள்ள இவர் பேட்டி அளித்துள்ளார். சினிமாவில் 16 வயசாக இருந்தாலும் 90 வயசு கிழவியாக இருந்தாலும், இரவில் கதவை தட்டும் நபர்கள் தான் அங்கு இருக்கிறார்கள். 


ஆனால், தமிழ் சினிமாவில் நான் இதுவரை பல படத்தில் நடித்துவிட்டேன். இங்கு யாரும் என்னை தப்பா பேசியதே இல்லை. அதற்காக நான் கையெடுத்து கும்பிடுகிறேன். பல பெண்கள் என்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள் என்று பொதுஇடத்தில் சொல்லுகிறார்கள். விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லிவிட்டு சென்றுவிடலாம். ஆனால், அதை பொது இடத்தில் சொல்லுகிறார்கள். இப்படி சொல்லக்கூடிய பெண்கள் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். 


இதனால், அந்த பெண்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால், சில விஷயத்தை சொல்லும் போது யோசித்துத்தான் சொல்ல வேண்டும். சினிமாவில் நடிகைகளை சாக்கடை புழுவா தான் பாக்குறாங்க, அவர்களுக்கும் மனசு இருக்கு குடும்பம் இருக்கு, அவங்க மனசுவிட்டு அழவேண்டும் என்று நினைத்தால் கூட அவர்களால் அழ முடியாது.  ஏன் குத்தி மேலும் ரணமாக்க வேண்டும் என்று நடிகை சாந்தி வில்லியம்ஸ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Advertisement

Advertisement