• Dec 27 2024

27 வருடங்களை வெற்றிகரமாக கடந்த சூர்யா ... பாராட்டலோடு வெளியான புதிய போஸ்டர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சூர்யா. இவரது பயணம் இந்த படத்திலேயே ஆரம்பித்தது. இந்த படத்தில் விஜயும் நடித்திருந்தார். மேலும் படத்தை வசந்த் இயக்க, மணிரத்தினம் தயாரிப்பில் இந்த படம்  வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் தேவா இசையில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் காரணத்தினால் சூர்யாவிற்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக  இருந்தது.

இந்த நிலையில், சினிமா துறையில் 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த சூர்யாவை பாராட்டும் வகையில் சூர்யாவின் 44 வது டீம் சார்பில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.


குறித்த போஸ்டரில் சூர்யா பைக் ஓட்டி வருவதாக காட்டப்படுகிறது இதன் பின்னணியில் நேருக்கு நேர் லுக்கில் சூர்யா பைக் ஒட்டி வருவதை குறிப்பதோடு 27 ஆண்டு கால பயணத்தை குறிப்பதாகவே இந்த போஸ்டர் அமைந்துள்ளது. தற்போது குறித்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரல்  ஆகியுள்ளது.

சூர்யா 44 படத்தின் சூட்டிங் அந்தமானில் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் ஊட்டியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement