• Dec 26 2024

கேப்டன் விஜயகாந்தின் மறைவை தொடர்ந்து நெல்லை விரைந்த நடிகர் விஜய்! காரணம் என்ன தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், தனது 68வது திரைப்பட பணிகளுக்காக ஹைதராபாத்தில் நடித்து வந்த நிலையில், சில  தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 

அதன்படி, நேற்று முன்தினம் கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டதும் ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய அவர், அன்று நள்ளிரவே விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 


இந்நிலையில், தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய்.

அதன்படி, இன்றைய தினம் சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்படும் நடிகர் விஜய், நெல்லையிலுள்ள கேடிசி நகரில் காலை 11 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். 


மேலும், விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் குறித்த திட்டத்தில் பங்காற்ற உள்ளனர்.

இதேவேளை,  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement