2023-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'மாமன்னன்' திரைப்படத்திற்குப் பிறகு, வடிவேலு மற்றும் பகத் பாசில் மீண்டும் இணைந்துள்ள 'மாரீசன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இந்த படம், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது தயாரிப்பாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவு கலைசெல்வன் சிவாஜி என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'மாரீசன்' திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள 'மாரீசன்' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் சமூக ஊடகங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றது. வடிவேலுவின் யதார்த்தமான நகைச்சுவை, பகத் பாசிலின் தனிச்சிறப்பான நடிப்பு மற்றும் யுவனின் இசை ஆகியவை ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. 'மாரீசன்' ஒரு தனிச்சிறப்பான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!