பாலிவுட் திரைத்துறையின் பிரபல ஜோடிகளில் ஒருவர் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய். இவ்வளவு பிரபலத்துடன் கூடிய குடும்பத்தில் ஆராத்யா பிறந்தாலும், அவர் மிகவும் எளிமையாக வளர்க்கப்பட்டுள்ளார் என்பதை சமீபத்தில் அபிஷேக் பச்சன் உணர்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய ஒரு நேர்காணலில் அபிஷேக் பச்சன், “எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் தொலைபேசி இல்லை. சமூக ஊடகங்களிலும் அவர் இல்லை. இதற்கான முழு பெருமையும் என் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கே சேரும். அவரே இந்த விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடுடன் கவனித்து வருகிறார்.” எனக் கூறியுள்ளார்.
இது போன்ற பிரபலத்தின் குடும்பத்தில் வளர்கிற பிள்ளைகள், பெரும்பாலும் சமூக ஊடகங்களில் நாட்டம் உடையவர்களாகவே வளர்கின்றனர். அந்தவகையில், ஆராத்யாவை மிகவும் தனிமையான சூழலில் வளர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் பச்சனின் இந்த நேர்காணல் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதுடன் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. சிறுவயதில் குழந்தைகளை தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி, உண்மையான வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் வகையில் வளர்த்தல் என்பது பெரும்பாலானோருக்கும் உத்வேகம் தரும் செய்தியாகவும் காணப்படுகிறது.
Listen News!