தமிழ் சினிமா நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் தற்போது ஒரு பரபரப்பான குற்றவியல் வழக்கில் சிக்கியுள்ளதால், திரையுலகத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய இந்த இருவரும், சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சென்னையில் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது, கொகைன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைதுக்குப் பின் அவர்கள் மீது NDPS சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், பின்னர் புழல் சிறையில் அனுப்பப்பட்டனர். கைதுக்குப் பின், இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை முழுமையாக கேட்டறிந்த நீதிபதி, "மனுக்களுக்கான தீர்ப்பு ஜூலை 8-ஆம் தேதி வழங்கப்படும்" என தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் நாளைய தினத்திற்கான தீர்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
Listen News!