• Dec 26 2024

வயதான ரசிகையின் ஆசையை நிறைவேற்றி வைத்த அஜித்- ட்ரெண்டாகும் சூப்பர் கிளிக்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அத்தோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.இதனை அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

விடாமுயற்சி என்னும் டைட்டில் இடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.  தற்போது அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்ட படக்குழு, அடுத்து துபாயில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாம். அதற்காக 5 நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாக கூறுகின்றது.


இதனையடுத்து அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார் அஜித். அவர் சென்னை திரும்பிய வீடியோ டுவிட்டரில் ட்ரெண்டானது.சென்னை விமான நிலையத்தில் இருந்து செம்ம ஸ்டைலிஷாக வெளியேறினார் அஜித். அதனைத்தொடர்ந்து தற்போது அஜித்தின் போட்டோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

 அதில் ஒரு வயதான பெண்மணி வீல் சேரில் இருந்தபடி அஜித்தை அரவணைக்க முயற்சிக்கிறார். அஜித்துக்கும் அவரது தோள்மீது கை போட்டு போட்டோ எடுத்துள்ளார். வயதானவராக இருந்தாலும் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்ற அவருடன் போட்டோ எடுத்துக்கொண்ட அஜித்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement