• Dec 26 2024

தல ஜோக் எல்லாம் அடிக்குதே! இதுதான் குட்பேட்அக்லீ லுக்கா? வைரலாகும் அஜித்தின் பான்ஸ் மீட் வீடியோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

ரஜனி ,கமல் என்று ரசிகர்கள் போட்டி போட்ட காலம் கடந்து தற்போது விஜய் , அஜித் என கொண்டாடி வருகின்றனர். விஜய் ரஜனியை போல் ஸ்டைலிஷ் நடிகராக உள்ளார் ஆனால் அஜித்தை அப்படி இல்லை என்று விமர்சிப்பவர்களுக்கு  வாலி , வில்லன் ,பில்லா போன்ற திரைப்படங்களின் ஊடாக ரஜனியை போன்று மாஸ் ஹீரோ என்றும் கமலை போன்று நல்ல நடிகன் என்றும் நிரூபித்தவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆவார்.


இவர் இதுவரை திரைப்படத்தை தவிர வேறு எந்த சினிமா சம்பந்தமான நிகழ்வுகள் , விருது வழங்கும் நிகழ்வுகள் , இசைவெளியீட்டு விழாக்கள் என எதிலும் கலந்து கொண்டதில்லை. தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய அளவில் உள்ள நடிகர் பட்டாளத்தில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து எனக்கு ரசிகனாக எவரும் இருக்க வேண்டாம் என்று கூறிய ஒரே நடிகரும் இவரே ஆவார்.


இந்த நிலையிலேயே இவரது நடிப்பில் தயாராகிக்கொண்டு இருக்கும் திரைப்படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகும். இவ்வாறு குறித்த படத்தில் இவரது லுக் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஸ்டன்னிங் ஆன ஒரு லுக்குடன் தனது கையொப்பம் போட்டு கொடுத்து நகைச்சுவையாக கதைத்தும் உள்ளார்.குறித்த வீடியோக்கள் வைரலாகி வருவதுடன் அவரது லுக் எந்த திரைப்படத்திற்குரியது என்றும் பரபரப்பாக  பேசப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement