தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கும் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மாமன், ஆக்ஷன், ஜகமே தந்திரம் போன்ற பல படங்களில் முத்திரை பதித்ததோடு, சினிமா ரசிகர்களிடையே தன்னிகரற்ற ஈர்ப்பு பெற்றவர். தற்போது, அவர் தனது சமூக வலைத்தள கணக்குகளை இடைநிறுத்தும் முடிவை அறிவித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி தகவலாக பரவி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தனது நடிப்புப் பயணத்தில் மேலும் தீவிரமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான முக்கியமான முடிவை எடுத்துள்ளார் ஐஸ்வர்யா.
இது ஒரு சாதாரண ப்ரேக் அல்ல. நடிகை தனது Instagram மற்றும் X தளக் கணக்குகளில் தொடர்ந்து இயங்கிவந்தவர். ஆனால் தற்போது, “நான் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன். நடிப்பில் முழுமையாக நுழையவே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு மிக எளிமையாக இருந்தாலும், அந்த தீர்மானம் மிகவும் உறுதியானது. இன்று நடிகைகள் பலரும் தங்களது படங்களை முன்னிறுத்த சமூக வலைத்தளங்களை உபயோகிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ஐஸ்வர்யா எடுத்துள்ள இந்த முடிவு, அவருடைய கலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையே பிரதிபலிக்கிறது.
Listen News!