தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், திறமையான நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், சமீபத்தில் வழங்கிய ஒரு நேர்காணலில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், முன்னாள் வாழ்க்கைத் துணை சைந்தவிக்கு தன் மனத்தில் இருக்கும் மரியாதையைப் பற்றியும் உருக்கமான வார்த்தைகளில் தெரிவித்துள்ளார்.
அதன்போது, "நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம் என்பதால் எங்களால் இணைந்து பணியாற்ற முடிகிறது. ஒருவரை விட்டு விலகிப் போனாலும் அவங்களுக்கு கடைசி வரைக்கும் கொடுக்க வேண்டிய பரஸ்பர மரியாதையை கொடுக்கணும். அது வார்த்தைல மட்டுமல்லாம செயல்லயும் இருக்கணும். சைந்தவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நான் எப்போதும் கொடுப்பேன்." என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பள்ளி நண்பர்கள். பல வருடங்கள் காதலித்து, அவர்கள் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் பெண் குழந்தையை பெற்றிருந்தார்கள். பாட்டு, இசை, குடும்பம் என வாழ்ந்த இந்த ஜோடி, தமிழ் திரையுலகில் "perfect ஜோடி" என ரசிகர்களால் அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கிடையே இருந்த அந்த அன்பும், புரிந்துணர்வும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான அடையாளமாக இருந்தது. பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
இந்நிலையில், “மரியாதை என்பது வார்த்தையில் மட்டுமல்ல, செயலிலும் இருக்க வேண்டும்” என்ற ஜி.வி. பிரகாஷின் கருத்து, அவர்களது பிரிவின் பின்னணியை வெளிச்சம் போடுகிறது.
Listen News!