• Dec 26 2024

சர்வதேச கடத்தல் மன்னனாகிய அல்லு அர்ஜுன்.. ‘புஷ்பா 2’ படத்தின் கதை இதுதான்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்ற நிலையில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது.

’புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் புஷ்பாவாக நடித்திருந்த அல்லு அர்ஜுன் உள்ளூர் அளவில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தார். ஆந்திராவின் முக்கிய பகுதிகளில் அவர் செம்மரக்கட்டைகளை கடத்தி பணம் சம்பாதிப்பது போல் கதை அமைந்திருந்தது.



இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் செம்மரக்கட்டைகளை வெளிநாட்டிற்கு கடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது போல் கதை கொண்டு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செம்மரக்கட்டைகளை அவர் ஆந்திராவில் இருந்து ஜப்பானுக்கு கடத்துவதாகவும், இதனால் ஜப்பானில் சில காட்சிகள் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் படக்குழுவினர் சமீபத்தில் ஜப்பான் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்திலும் நாயகி ஆக நடித்து வருகிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த பகத் பாசில், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில் உள்ளிட்டோரும் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கும் இசையமைத்து வருவதாகவும் இந்த படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement